Skip to product information
NaN of -Infinity

தடாகம் வெளியீடு

உள்ளொளி

உள்ளொளி

Regular price Rs. 320.00
Regular price Sale price Rs. 320.00
Sale Sold out
Shipping calculated at checkout.

உள்ளொளி இசைக் கவிதைகள்

உயிர்களின் உயிரே உலகின் உணர்வே... . காதல் நிலைத்திடும் கருணையின் உருவே...

தோற்றங்கள் பலவாய் தோகையின் மகிழ்வாய்... தோரண அழகாய் தோன்றும் வியப்பே...

நீயின்றி புவியில் நிம்மதி இல்லை... நேசத்தை சுமக்கா தாய்மடி இல்லை...

* (உயிர்களின் உயிரே..)

தாகத்தைப் தீர்க்கும் தரணியின் தருவே... தளிர்களின் சிரிப்பில் வாழ்ந்திடும் உருவே

மின்னலாய் புன்னகை மேகமாய் எழில்நடை... விண்ணின் விளக்கம் உன்னில் பிறக்கும்

ஆறுதல் அளிக்கும் ஆறுதல் ஆவாய்... அகங்கள் உயிர்க்கும் அருமருந்து ஆவாய்...

வேதனைப் போக்கும் விந்தையின் கருநீ.... விண்ணில் பூக்கும் விருட்சத்தின் மணம்நீ... (உயிர்களின் உயிரே..)

மானுடம் சுமக்கும் மயக்கங்கள் தெளிய... மாயங்கள் விலக்கும் மாபூதத் திருவே...

உன் விளையாட்டில் உயிர்த்தெழும் வையம்... பூமியின் தாகம் காதலாய் பூக்கும்...

ஏரிக் குளங்களின் ஏக்கத்தை தீர்ப்பாய்.... ஆறாய் அமுதாய் அவதார இயல்பாய்...

மானுடத் தோற்றத்தின் மாதவக் கூறே.... மாமழையாக மலர்ந்திடும் மகிழ்வே...

(உயிர்களின் உயிரே..)

 

மூலம் கவிதை
எழுத்தாளர் ஏ.இரமணிகாந்தன்
பக்கங்கள் 336
பதிப்பு முதற் பதிப்பு - 2019
View full details